A+ A-

உடபலாத்த, தொழுவ பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்கள்







கம்பளை, உடபலாத்த பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று (04) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் உடபலாத்த பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களான கம்பளை நகரசபை தலைவர் சமந்த அனுரகுமார, உடபலாத்த பிரதேச செயலாளர் துஷாரி தென்னகோன், அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எம். நயீமுல்லா, உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இலங்கவத்தே பிரதேசத்தில் நிலவும் வடிகான் பிரச்சினையை உடனடியாக தீர்த்து தருமாறு இக்கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. உடனடியாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் குறித்த இடத்துக்கு விஜயம்செய்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வரவழைத்து இருதரப்பினருடனும் பேசி உரிய தீர்வினை வழங்குமாறு உத்தரவிட்டார். 

இதன்பின்னர் கம்பளை, தொழுவ பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் தொழுவ பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இதில் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களான கம்பளை நகரசபை தலைவர் சமந்த அனுரகுமார, தொழுவ பிரதேச செயலாளர் தயானந்த, அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எம். நயீமுல்லா, உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.