A+ A-

மிக நீண்டகாலமாக புனரமைப்பு செய்யப்படாத புதிய காத்தான்குடி மத்திய வீதியின் குறுக்கு வீதிகள் அபிவிருத்தி தொடர்பில் மக்களோடு கலந்துரையாடல்







மிக நீண்டகாலமாக அபிவிருத்திகள் செய்யப்படாது காணப்பட்ட புதிய காத்தான்குடி மத்திய வீதியின் குறுக்கு வீதிகளானது நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளருமான யு.எல்.எம்.என்.முபீன் அவர்களின் வேண்டுகோளின் பேரில் தேசிய ஒருமைப்பாடு,நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதியமைச்சரும்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அஸ்ஸெய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களின் முயற்சியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களின் கம்பரெலியா கிராம அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் 20 இலட்சம் ரூபா செலவில் கொங்கிறீற்று வீதிகளாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

இந்த வீதி அபிவிருத்தி தொடர்பிலான விடயங்களை கலந்தாலோசிக்கும் மக்கள் சந்திப்பு ஒன்று அண்மையில் இடம்பெற்றது.நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளருமான யு.எல்.எம்.என்.முபீன் அவர்கள் கலந்துகொண்ட இந்த மக்கள் சந்திப்பில் வீதி அபிவிருத்திப்பணிகள் ஆரம்பிக்கப்பட முன்னராக குறித்த வீதியில் வசிக்கும் மக்கள் அவசியம் செய்துகொள்ள வேண்டிய விடையங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டு கலந்துரையாடப்பட்டது.

இந்த மக்கள் சந்திப்பில்  யு.எல்.எம்.என்.முபீன் அவர்களின் இணைப்பாளர் T.M.தெளபீக் Jp,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் காத்தான்குடி நகரசபைக்கான இரண்டாம் வட்டார வேட்பாளர் அன்ஸார், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தீவிர செயற்பாட்டாளர் ராஸிக்  உற்பட பொதுமக்கள்,பெண்கள் எனப்பலரும் கலந்து கொண்டதோடு மிக நீண்ட காலமாக புனரமைப்பு செய்யப்படாத இந்த குறுக்கு வீதிகளால் தாம் மிகுந்த சிரமங்களை அனுபவித்து வந்ததாகவும் மழை காலங்களிலும் மிக அதிகமான கஷ்டங்களை எதிர்நோக்கியதாகவும் இவ்வீதி அபிவிருத்திக்கு முயற்சிகளை மேற்கொண்ட பிரதியமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா அவர்களுக்கும் நகரசபை உறுப்பினர் யு.எல்.எம்.என்.முபீன் அவர்களுக்கும் மிகுந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாகவும் கருத்து தெரிவித்தனர்.

புதிய காத்தான்குடி மத்திய வீதியோடு இணைந்த மூன்று குறுக்கு வீதிகள் கொங்கிறீற்று வீதிகளாக புனரமைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

(ஆதிப் அஹமட் )