A+ A-

பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானாவினால் சிறுவர்களுக்கு அன்பளிப்பு பொதிகளையும் வழங்கி வைப்பு













சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா அவர்கள் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார்கள்.
அதன் ஒரு அங்கமாக வித்தியாசமான முறையிலும் சிறுவர்களினதும் பெற்றோர்களினதும் உணர்வுகளை உணர்ந்த ஒருவராக ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்து அங்கு சிகிச்சை பெறும் சிறுவர்களை நலம் விசாரித்ததுடன் - அவர்களுக்காய் பிரார்த்தித்தவராக அன்பளிப்பு பொதிகளையும் வழங்கி வைத்தார்கள்.
அத்துடன் அங்கு சிகிச்சை பெறும் முதியவர்களையும் சந்தித்து தன் உள்ளார்ந்த அன்பினை பரமாறிக் கொண்ட பிரதியமைச்சரின் செயற்பாட்டை அங்கிருந்த நோயாளர்கள் முதல் ஊழியர்கள் வரை பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் Dr, முனாஸ் அவர்களிடம் ஏறாவூர் வைத்தியசாலையின் பணிகளை வினைத்திறன் மிக்கதாக ஆக்கக்கூடிய வகையில் அதன் தேவைகள் குறைபாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டமை இங்கு விஷேட அம்சமாகும்....