A+ A-

புதிய மாகாண விளையாட்டு பணிப்பாளரினால் சிநேகபூர்வ மென்பந்து கிரிக்கட் போட்டி






கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்கள மாகாணப் பணிப்பாளரின் ஏற்பாட்டிலும் கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹிதபோகொல்லாகம அவர்களின் எண்ணக் கருவின் கீழ்  சிநேகபூர்வமான மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி இன்று (24) புதன் கிழமை கிண்ணியா அல் இர்பான் விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.

கிழக்கு மாகாண திணைக்கள உத்தியோகத்தர்களுக்கும் கிண்ணியா யுனைட்டட் கழகத்துக்கும் இவ் சிநேகபூர்வமான கிரிக்கட் மென்பந்து இடம் பெற்றது.
விளையாட்டு திறமைகளை வெளிக்கொண்டு வரும் நோக்கில் விசேட ஏற்பாடாக இப் போட்டி இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த யுனைட்டட் கழகத்துக்கு ஒரு தொகை விளையாட்டு உபகரணங்களும் இதன் போது மாகாணப் பணிப்பாளரினால் வழங்கப்பட்டது.

இப் போட்டியில் கிழக்கு மாகாண விளையாட்டு பணிப்பாளர் என்.எம்.நௌபீஸ், கிழக்கு ஆளுனரின் ஊடகச் செயலாளர் ஹஸன் அலால்தீன், போக்குவரத்து திணைக்கள பணிப்பாளர் நாயகம் உதய குமார, இணைப்புச் செயலாளர் எஸ்.கே.ஜயரட்ண உட்பட பலர் கலந்து கொண்டு இவ் சிநேகபூர்வ விளையாட்டில் சிறந்த வீரர்களாகவும் செயற்பட்டனர்.

(ஹஸ்பர் ஏ ஹலீம்)