பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அவர்களுடைய தொழிலை சிறப்பாக கொண்டு செல்லும் நோக்கில் கிண்ணியாவில் இயங்கி வரும் சமூக மறுமலர்ச்சிக்கான பெண்கள் அமைப்பினால் நேற்று புதன் கிழமை (17) கிண்ணியா நகர சபையின் துறையடி விடுதி மண்டபத்தில் வைத்து தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.
சமூக மறுமலர்ச்சிக்கான பெண்கள் அமைப்பின் தலைவி திருமதி ரோஹினா மஹரூப் அவர்களின் கோரிக்கைக்கு அமைய கட்டார் நிறுவனத்தின் அனுசரனையில் 20 தையல் இயந்திரங்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.
(ஹஸ்பர் ஏ ஹலீம்)