சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பயன் தரும் மரம் நடும் நிகழ்வு மற்றும் சிறுவர் சேமிப்பு கணக்கில் வைப்புச் செய்தவர்களுக்கு பரிசில் வழங்கும் நிகழ்வு என்பன நேற்று (17) புதன்கிழமை சாய்ந்தமருது சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கியில் இடம்பெற்றது.
சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கியின் முகாமையாளர் எம்.எஸ்.எம்.மனாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி தலைமைக் காரியாலய முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வங்கி வளாகத்தில் மரத்;தினை நாட்டி வைத்ததுடன் சிறுவர் சேமிப்பு கணக்கில் வைப்புச் செய்தவர்களுக்கு பரிசில்களையும் வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் சமுர்த்தி முகாமையாளர் ஏ.கபூர், வங்கி உதவி முகாமையாளர் எம்.யூ.ஹில்மி, சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம்.வி.எம். அன்லைஸ், யூ.எல்.ஜஃபர், எம்.வை.றசீட், கே.ஆதம்பாவா, ஏ.எம்.காலிதீன் உள்ளிட்ட சமுர்த்தி பயனுகரிகளும் கலந்து கொண்டனர்.
(றியாத் ஏ. மஜீத்)