இளைஞர் காங்கிரஸின் கல்விக்கான கருத்தரங்கு சாதாரண தர (O/L) மாணவர்களுக்கான கருத்தரங்குகள் 20 ஆம் திகதி எலபடகம அல் அமீன் மத்திய கல்லூரியில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் எலபடகம, பம்மன்ன,மும்மானை ஆகிய பாடசாலை மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
அத்துடன் புத்தளம், புழுதிவாசல் முஸ்லீம் வித்தியாலயத்தில் நடைபெற்றது. ஆரம்ப நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நியாஸ் மற்றும் பாடசாலை அதிபர், அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டார்கள். கல்பிடி பிரதேச சபை உறுப்பினர் ஜஸீம் ரஹ்மான் இதற்கான ஏற்பாடுகளை மிகச்சிறப்பாக செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் சிந்தனையில் உருவான “வீட்டுக்கு வீடு மரம் – பசுமைப்புரட்சிக்கான அழைப்பு” இன் ஓர் அங்கமாக மேற்படி இரு பாடசாலைகளிலும் மரக்கன்றுகள் நடப்பட்டன.
கருத்தரங்குத் தொடரினை கட்சியின் கல்வி விவகாரங்களுக்கான தேசிய ஒருங்கிணைப்பாளர் சாபிர் மன்சூர் அவர்கள் அர்ப்பணிப்புடன் தலைமையேற்று நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(கஹட்டோவிட்ட ரிஹ்மி)