A+ A-

SLMC கல்வி விவகாரங்களுக்கான தேசிய ஒருங்கிணைப்பாளர் சாபிர் மன்சூர், கோட்டே மாநகர சபை உறுப்பினர் அலி உதுமான் ஆகியோருக்கு “தேசபந்து” விருது








ஐக்கிய நாடுகள் சபையின் 73 ஆம் ஆண்டு நிறைவைகொண்டாடும் முகமாக; ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச கல்வி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தேசிய சமாதான சங்கம் ஆகியன இணைந்து தேசிய சமூக சேவை ஆர்வலர்களை கௌரவிக்கும் நிகழ்வினில் சாபிர் மன்சூர் சமூகத் தொண்டு நிறுவனத்தின் தலைவரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்வி விவகாரங்களுக்கான தேசிய இணைப்பாளரும், இளைஞர் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட அமைப்பாளருமான சாபிர் மன்சூர் அவர்கள் செய்த சமூக சேவைகளைகருத்திற்கொண்டு நேற்று முன்தினம்  (21) கொழும்பு BMICH மாநாட்டு மண்டபத்தில் “தேசபந்து” “දෙශබන්දු” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
அதேவேளை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்ரீ ஜயவர்தனபுர – கோட்டே மாநகர சபை உறுப்பினரும், கோட்டே தேர்தல் தொகுதி அமைப்பாளருமான அலி உஸ்மான் அவர்கள் தேசிய சமய, கலாசார, வர்த்தக, சமூக சேவை, தேசிய மறுமலர்ச்சிக்கான விவேகம், திறன்கள், பொதுமக்களுக்கான சேவைக்காக அவரது வாழ்க்கையை அர்ப்பணித்தமைக்காக “தேசபந்து” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
(கஹட்டோவிட்ட ரிஹ்மி)