நாட்டின் தற்போதைய அரசியல் களநிலவரங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்ட செயற்குழுக் கூட்டம் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் தற்போது வடமேல் மாகாணசபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், உயர்பீட உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் பலர் இதில் கலந்துகொண்டுள்ளனர்.