A+ A-

ஷாபி ரஹீமின் நிதியொதுக்கீட்டில் மள்வானையில் நடைபெற்ற Painting பயிற்சி நெறி





ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம் அவர்களின் நிதியொதுக்கீட்டில் கம்பஹா மாவட்டத்திலுள்ள பியகம தேர்தல் தொகுதிக்கு உட்பட்ட, மள்வானை - உலஹிடுவல பிரதேச பெண்களுக்கு ஒருநாள் Painting பயிற்சிநெறியொன்று நேற்றைய தினம் (05) நடைபெற்றது. 

இந்நிகழ்வில் இந்தியாவிலிருந்து வருகை தந்த பயிற்றுவிப்பாளர் விஜா உடன் திருமதி நாமல் ஆகியோர் பயிற்சிகளை வழங்கினர். இதன் போது மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம் அவர்களுடன் பிரதேச கட்சி முக்கியஸ்தர்களான ஹசன், வஹாப் ஆகியோர் மேற்பார்வையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

- கஹட்டோவிட்ட ரிஹ்மி -