A+ A-

மட்டக்களப்பு மாநகர மேயருடன் சிநேகபூர்வ சந்திப்பு




மட்டக்களப்பு மாநகர சபை மேயர் தியாகராஜா சரவணபவன் அவர்களுக்கும் நகர திட்டமிடல்,நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சின் இணைப்புச் செயலாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளருமான  யு.எல்.எம்.என்.முபீன் அவர்களுக்குமிடையிலான சிநேகபூர்வமான சந்திப்பு நேற்று(14) மேயரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

மேயருக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்த முபீன்,தொடர்ந்து மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குள்  திட்டமிடல்,நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சு,சமூக வலுவூட்டல் அமைச்சு மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சு ஊடாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்,அபிவிருத்திகள் தொடர்பில் விஷேடமாக ஆராயப்பட்டதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் சமாதான சகவாழ்வை கட்டியெழுப்புவது தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த மேயர் சரவணபவன் தான் சகல மக்களையும் அரவணைத்து பாரபட்சமற்ற வகையில் செயற்படுவதாகவும்,தனது பதவிக்காலத்த்தில் மாவட்டம் சார்த்த பல்வேறு அபிவிருத்தி சமூகம் சார் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்தார்.

மேயரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை அமைச்சர் றவூப் ஹக்கீம்,இராஜாங்க அமைச்சர்களான அலி ஸாஹிர் மௌலானா மற்றும் எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகியோர்களின் கவனத்திற்கு கொண்டுசெல்வதாக முபீன் அவர்கள் இதன்போது தெரிவித்தார். 


(ஆதிப் அஹமட் )