முன்னாள் கிண்ணியா பிரதேச சபையின் தவிசாளார் கே.எம்.நிஹார் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தொளபீக் அவர்களின் முயற்சியினால் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கள் மற்றும் உயர்கல்வி அமைச்சருமான கெளரவ ரவூப் ஹக்கீம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் ரூபாய் 1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு புணர் நிர்மாண வேலைகள் இன்று (19. 01. 2019) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் சட்டத்தரணி எச்.எம்.எம்.பாயிஸ், பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கே.எம்.நிஹார், நகர் சபை உறுப்பினர் கலிபத்துள்ளா, பிரதேச சபை உறுப்பினர்களான நசீர், இப்னுல்லா, குசைதீன் மற்றும் முன்னாள் நகர சபையின் உதவி தவிசாளர் சட்டத்தரணி முஜீப் மற்றும் சமூகத்தலைவர்கள் இளஞர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.