திண்மக் கழிவு முகாமைத்துவத்தை துரிதப்படுத்துவதற்கான முதற்கட்ட இயந்திர தொகுதிகள் இலங்கை வந்தடைந்துள்ளன, அவற்றில் 16 இயந்திர தொகுதிகளை கிழக்கு மாகாணத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட பல உள்ளூராட்சி மன்றங்களுக்கு எதிர்வரும் சனிக்கிழமை (9) வழங்குவதற்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
மேலும் கொரிய மற்றும் இந்திய நாடுகளின் உதவியுடன் இரண்டாம் கட்ட இயந்திர தொகுதிகள் கூடியவிரைவில் இலங்கை வந்தடையவுள்ளன. அவற்றிலும் பல இயந்திர தொகுதிகளை கிழக்கு மாகாணத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கு கையளிப்பதற்கான நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
- ஊடகப் பிரிவு -