நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையில் United States Pacific Command நிறுவனத்தின் சுமார் 07 கோடி ரூபா நிதி உதவியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடி கட்டிடம் நேற்று திறந்துவைக்கப்பட்டது.
பாடசாலை அதிபர் ஏ.எல். நிசாமுதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம், அமெரிக்க மற்றும் மாலைதீவுக்கான தூதரகத்தின் அரசியல் பிரிவு தலைமையாளர் அந்தோணி எப் ரென்சுல்லி, அமெரிக்க மற்றும் மாலைதீவுக்கான தூதரகத்தின் சிவில் இராணுவ பணிப்பாளர் டெர்ரி ஏ ஜோன்சன், கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரி.ஏ நிஸாம், நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர், நிந்தவூர் பிரதேச செயலாளர் ஏ.எம். லத்தீப், கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ். அப்துல் ஜலீல், உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
[ஊடகப் பிரிவு]