A+ A-

அபிவிருத்தி பணிகளை மக்களிடம் கையளிக்க அமைச்சர் ஹக்கீம் அநூராதபுரம் விஜயம்




ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் எதிர்வரும் சனிக்கிழமை (02) வடமத்திய மாகாண முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷட பிரதித் தலைவர் ஏ.சி.ராவுத்தர் ரயினா முஹம்மத்தின் வேண்டுகோளிற்கிணங்க, அநுராதபுரத்திற்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின் போது அநுராதபுர மாவட்டத்தில் அமைச்சரின் நிதியொதுக்கீட்டின் கீழ் பூர்த்தி செய்யப்பட்ட பல அபிவிருத்தி திட்டங்கள் உத்தியோகபூர்வமாக அமைச்சரினால் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

அநுராதபுர மாவட்டத்தில் நிலத்தடி நீரில் கலந்திருக்கின்ற இரும்புத் தாதுக்களின் காரணமாக சிறுநீரக நோயினால் பாதிப்புக்குள்ளானவர்கள் அதிகமாக வாழுகின்ற பிரதேசங்களில் நிறுவப்பட்டுள்ள நீர் சுத்;திகரிப்பு இயந்திரம் (சுழு Pடயவெ) அன்றைய தினம் அமைச்சரினால் மக்களின் பாவனைக்காக கையளிக்கப்படும். இதன் மூலம் அப்பிரதேசத்தில் பரவலாக காணப்படும் சிறுநீரக பாதிப்பினை கட்டுப்படுத்த முடியும். 

தூய குடிநீரை பெற்றுக்கொள்வதில் சிரமத்தை மேற்கொள்ளும் இப்பிரதேச மக்களுக்கு தூய குடிநீரை பெற்றுக்கொள்வதற்கும் அசுத்தமான நீரினால் ஏற்படுகின்ற பல்வேறுபட்ட நோய்களிலிருந்து பாதுகாப்பு பெறவும் இதன்; மூலம் சாத்தியப்படும்.

காலை 9மணி தொடக்கம் ஹொரவப்பத்தானை தேர்தல் தொகுதியில் உள்ள பத்தாவ, கடவத்த ரத்மல, கஹட்டகஸ்திகிலிய சந்தி, மற்றும் மிஹிந்தலை தேர்தல் தொகுதியில் உள்ள நாச்சியாதீவு, ரஜரட்ட பல்கலைக்கழக வளாகம் ஆகிய பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்ற நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் (சுழு Pடயவெ) மக்கள் பாவனைக்காக அமைச்சரினால் கையளிக்கப்படும்.

அவ்வாறே அநுராதபுர மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நகர திட்டமிடல், அமைச்சின் நிதியொதுக்கீட்டின் கீழ் புணர்த்தாபனம் செய்யப்பட்ட வீதிகளும் அமைச்சரினால் அன்றைய தினம் திறந்து வைக்கப்படுவதோடு நாச்சியாதீவு. அநுராதபுரம். மிஹிந்தலை கட்டுகெலியாவ போன்ற பிரதேசங்களில் வாழுகின்ற கட்சியின் ஆதரவாளர்களை சந்தித்து அமைச்சர் ஹக்கீம் உரையாடுவார்.