A+ A-

வணக்கஸ்தலங்கள்-பாடசாலைகளுக்கு நீர்த்தாங்கிகள்








ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் சொந்த நிதியிலிருந்து விகாரைகள், பள்ளிவாசல்கள், பாடசாலைகளுக்கு குடிநீர் தாங்கிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டன.

வெலிமடை பிரதேசத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும்
நோக்குடன் முதற்கட்டமாக இந்நீர்த்தாங்கிகள் கையளிக்கப்பட்டன.

வெலிமடை பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.பாயிஸ், ஏ.நஸார் ஆகியோரின் ஏற்பாட்டில் ரேந்த பொலவில் இடம்பெற்ற நிகழ்வில் சுகாதாரத்துறை இராஜாங்க
அமைச்சர் பைசல் காசிம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு குடிநீர் தாங்கிகளை
கையளித்தார்.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பதுளை மாவட்ட அமைப்பாளர் வீ.தாஜுதீன், மத்திய குழு உறுப்பினர்கள்,பிரதேச முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது சில்மியாபுரம், ரேந்த பொல, குருத்தலாவ பிரதேசங்களிலுள்ள மக்களிடம் சுகாதாரம் தொடர்பாக எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சர் கேட்டறிந்து கொண்டார்.

[ஊடகப் பிரிவு]