பதுளை சாவியா ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் இருக்கும் சிறிய பாலத்தை புனரமைத்து விஸ்தரிப்பதற்கு சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்தப் பாலம் நீண்டகாலமாக விஸ்தரிக்கப்படாமல் இருப்பதால் இதன் ஊடாகப் பயணிக்கும் மக்கள் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். பதுளை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுவினர் இராஜாங்க அமைச்சர் பைசல் காசிமின் கவணத்திற்கு இதைக் கொண்டுவந்தனர்.
இதனை தொடாந்து பதுளை சாவியா ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு சனிக்கிழமை (2019.02.16) விஜயம் செய்த பைசல் காசிம் பள்ளிவாசல் நிர்வாகத்துடன் இது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார்.இதைப் புனரமைப்பதற்கான நடவடிக்கையை உடனடியாக எடுப்பதாக இராஜாங்க அமைச்சர் பள்ளிவாசல் நிர்வாகத்தினரிடம் உறுதியளித்தார்.
இதன்போது ஸ்ரீங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினரும் பதுளை மாவட்ட அமைப்பளருமான வீ.தாஜூதீன், ஹாலிஎல பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் நிஹார் மாஸ்டர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பதுளை வட்டார அமைப்பாளர் இம்தியாஸ் பாறூக், பள்ளிவாசல் நிர்வாகத்தினர் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
[ஊடகப் பிரிவு]