இந்திய தூதுரகம் மற்றும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சின் ஒத்துழைப்புடன் இந்திய கல்விக் கண்காட்சி - 2019 'India Education Fair 2019' ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கொழும்பு, கிங்ஸ்பெரி ஹோட்டலில் வெள்ளிக்கிழமை (08) திறந்து வைக்கப்பட்டது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பல உயர் கல்வி நிறுவனங்கள் இந்த கண்காட்சிக்கு தங்கள் ஆதரவை வழங்கியுள்ளது. இக்கண்காட்சி தொடர்ச்சியாக சனிக்கிழமை (09) காலை 9.00 மணி முதல் 6.00 மணி வரை இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது .
மேலும், மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பவியல், கணனி கற்கைகள் மற்றும் கலை சார்ந்த பாடநெறிகள் சம்பந்தப்பட்ட உயர் கல்வி பற்றிய தகவல்களை இங்கு பெற்றுக்கொள்ளலாம்.
இந்நிகழ்வில் உயர் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் மாதவ தேவசுரேந்தர, சர்வதேச தொடர்புகள் சம்பந்தமான இந்திய கலாசார நிலையத்தின் முன்னாள் பணிப்பாளர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலய ஆலோசகர் கோபால நாராயண் ஆகியோரும் பங்குபற்றினர்.