A+ A-

போட்டோ கொப்பி இயந்திரம் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா அவர்களினால் வழங்கி வைக்கப்பு.






காத்தான்குடி மஃஹதுஸ்ஸூன்னா அந்நபவிய்யா மகளிர் அரபுக் கல்லூரியின் தேவை கருதி புகைப்பட பிரதி (போட்டோ கொப்பி) இயந்திரம் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

அரபுக்கல்லூரியின் தலைவர் ரிஸ்வான் (மதனி) தலைமையில் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் , நகர சபை உறுப்பினருமான முபீன் , ஏறாவூர் நகர சபை உறுப்பினர் ரியாழ் , அமைச்சரின் இணைப்பு செயலாளர்களான முன்னாள் தவிசாளர் தஸ்லீம், தபாலதிபர் நஸீர் முன்னாள் அதிபர் சயீட் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது கல்லூரியின் தேவை கருதி ஒரு மில்லியன் ரூபாய் நிதியை விரைவில் ஒதுக்கீடு செய்து தருவதாகவும் அதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறும் தனது இணைப்பு செயலாளர்களுக்கு இராஜாங்க அமைச்சர் அலி சாஹிர் மௌலானா அவர்களால் பணிப்புரை விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(ஊடகப்பிரிவு)