A+ A-

புத்தளம் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்





புத்தளம் மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் நகரபிதா கே.ஏ. பாயிஸ் தலைமையிலான கட்சி உறுப்பினர்கள் நேற்று புதன்கிழமை (06) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீமை பாராளுமன்றத்திலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் இவ்வருடத்துக்கான அபிவிருத்திகள் வேலைத்திட்டங்கள், குடிநீர் வழங்கல் திட்டங்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டன.