பதுளை மாவட்டம், பொரகஸ் நீர் வழங்கல் சுகாதார மேம்பாட்டுத் திட்டம், அமைச்சர் ஹக்கீமினால் ஆரம்பித்து வைப்பு
பதுளை மாவட்டம், பொரகஸ் நீர் வழங்கல் சுகாதார மேம்பாட்டுத் திட்டம், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீமினால் செவ்வாய்க்கிழமை (19) பொது மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
41.2 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம் சுமார் 5இ000 பேர் பயனடையவுள்ளனர்.