A+ A-

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் திருகோணமலை விஜயம்












திருகோணமலை மவாட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வட்டாரக் கிளைகளை புனரமைத்தல் தெடர்பிலான விஷேட கலந்துரையாடல்கள் பட்டினமும் சூழலும், தோப்பூர், மூதூர், கிண்ணியா, தம்பலகாமம் மற்றும் கந்தளாய் பிரதேசங்களில் கடந்த சனி (23) மற்றும் ஞாயிறு (24) தினங்களில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட ரீதியில் கட்சிக் கிளைகளை புனரமைப்பு செய்யும் பணிகளில் தொகுதி அமைப்பாளர்கள், பிரதேச அமைப்பாளர்கள், வட்டார அமைப்பாளர்கள் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் என அனைவரையும் நேரில் சென்று சந்தித்த தேசிய அமைப்பாளர் ஷபீக் ரஜாப்தீன், கட்சியை முன்னெடுத்துச் செல்வதற்கான செற்பாடுகள் குறித்து அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

அந்தந்த பிரதேசங்களுக்கு தேசிய அமைப்பாளர் ஷபீக் ரஜாப்தீன் நேரில் சென்று கட்சியின் கள நிலவரங்களை கேட்டறிந்து கொண்டதோடு, கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வது தொடர்பான ஆலோசனைகளையும் வழங்கினார்.

இதேவேளை, திருகோணமலை தொகுதி மகளிர் காங்கிரஸ் அமைப்பாளர் முர்ஷிதா அப்துல் சத்தார் ஏற்பாட்டில் குச்சவெளி பிரதேசத்தில் மகளிர் காங்கிரஸ் காரியாலயமும் தேசிய அமைப்பாளர் ஷபீக் ராஜாப்தீனால் திறந்து வைக்கப்பட்டது.

இக்கலந்துரையாடல்களில் மாகாண சபை முன்னாள் பிரதி தவிசாளர் எச்.எம்.எம். பாயிஸ், மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான ஆர்.எம். அன்வர், ஜே. லாஹீர், கிண்ணியா பிரதேச சபை முன்னாள் தவிசாளரும், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக்கின் பிரத்தியேக செயலாளருமான நிஹார் மற்றும் பிரதேச அமைப்பாளர்கள், கட்சி உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.