A+ A-

அமைச்சர் றவூப் ஹக்கீம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் காத்தான்குடி கடற்கரையில் மற்றுமொரு சிறுவர் பூங்கா






நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி  அமைச்சின் இணைப்புச் செயலாளரும் காத்தான்குடி நகரசபை உறுப்பினருமான யு.எல்.எம்.என்.முபீன் மற்றும் காத்தான்குடி நகரசபையின் முன்னாள் தவிசாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீட உறுப்பினருமான மர்சூக் அஹமட் லெப்பை ஆகியோர்களின் வேண்டுகோளின் பேரில் நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் றவூப் ஹக்கீமின்  ரூபா ஒரு கோடி நிதி ஒதுக்கீட்டில் காத்தான்குடி கடற்கரையில்  நவீன மயமான சிறுவர் பூங்கா ஒன்று காத்தான்குடி நகரசபையினால் அமைக்கப்பட்டு வருகின்றது.

2017ம் ஆண்டில் காத்தான்குடி கடற்கரை வீதியில் அமைந்துள்ள பழைய சிறுவர் பூங்காவினை புனரமைப்பதற்காக அமைச்சர் றவூப் ஹக்கீம் அவர்கள் ரூபா ஒரு கோடி நிதியினை ஒதுங்கியிருந்தார்.எனினும் அப்போது நகரசபையில் மக்கள் பிரதிநிதிகள் இருக்கவில்லை.அப்போதிருந்த செயலாளர் ஷபி அவர்கள் இது தொடர்பில் துரித நடவடிக்கைள் எடுக்காதததன் காரணமாக பணிகள் முன்னெடுக்கப்படாது நிதியானது திரும்பிச்சென்றது.பின்னர் வந்த செயலாளர் திருமதி.றிப்கா ஷபீன் சில முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் வருட முடிவிற்கு ஒரு சில நாட்களே எஞ்சியிருந்த படியினால் அந்த திட்டத்தை முன்னெடுக்க முடியவில்லை.

பின்னர் குறித்த சிறுவர் பூங்கா அமைக்க வேண்டுமென நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளரும் காத்தான்குடி நகரசபை உறுப்பினருமான யு.எல்.எம்.என்.முபீன் மற்றும் காத்தான்குடி நகரசபையின் முன்னாள் தவிசாளர் மர்சூக் அஹமட் லெப்பை ஆகியோர் முயற்சிகள் எடுத்த போது 2018 ஆம் ஆண்டு காத்தான்குடி நகரசபையினை தவிசாளர் தலைமையிலான மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பேற்றிருந்தனர்.எனவே இது தொடர்பில் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் அவர்களோடு யு.எல்.எம்.என்.முபீன்,மர்சூக் அஹமட்லெப்பை ஆகியோர் கலந்துரையாடிய போது கடற்கரை வீதியில் அமைந்துள்ள பழைய சிறுவர் பூங்கா அமைந்துள்ள இடத்தில் கடைத்ததொகுதிகள் உள்ளிட்ட நவீன வசதிகள் கொண்ட கட்டடங்கள் அமைக்க தீர்மானிக்கப்பட்டதுடன் குறித்த சிறுவர் பூங்காவினை கடற்கரையில் அமைப்பது என தீர்மானிக்கப்பட்டது.

அண்மையில் இந்த நவீன புதிய பூங்காவின் பணிகளை பார்வையிட நகராதிட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சின் அபிவிருத்திகளுக்கு பொறுப்பாக இருக்கின்ற மேலதிக செயலாளர் ஏ.சீ.எம்.நபீல் மற்றும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளர் யு.எல்.எம்.என்.முபீன் தலைமையிலான குழுவினர் விஜயம் மேற்கொண்டனர்.இதன்போது காத்தான்குடி நகரசபையின் செயலாளர் திருமதி றிப்கா ஷபீன் உள்ளிட்ட நகரசபையின் தொழிநுட்ப உத்தியோகத்தர்களும் இணைந்திருந்தார்.

ஏற்கனவே 2017ம் ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட பூங்காவுக்கான ஒதுக்கீடுகளில் வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டிருந்தால் இந்த நவீன பூங்காவோடு சேர்த்து 2 கோடி ரூபா செலவில் சிறுவர் பூங்காக்கள் அமைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த சிறுவர் பூங்கா அமைக்கும் விடயத்தில் அர்ப்பணிப்போடு ஒத்துழைத்து  பணிகளை துரிதமாக முன்னெடுத்து வருகின்ற நகரசபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் அவர்களுக்கு தன்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக முன்னாள் தவிசாளரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி  அமைச்சின் இணைப்புச் செயலாளருமான யு.எல்.எம்.என்.முபீன் இதன்போது தெரிவித்தார்.


(ஆதிப் அஹமட் )