பயிற்சிக்கான சான்றிதழ்களை வழங்குவது மட்டும் நடைமுறையாக இருக்காமல், பயிற்சிபெற்றவர்களுக்கு உரிய வேலை வாய்ப்புகளை வழங்கவும். இதனூடாக 2019 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் பேருக்குத் தொழில்வாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் செயல் முறைகளை வழிநடத்துவதற்கு தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபை நடவடிக்கை எடுத்து வருகின்றது என மேற்படி சபையின் தலைவர் பொறியிலாளர் நஸிர் அஹமட் தெரிவித்தார்.
இலங்கை தகவல் தொழில்நுட்ப தொழிற்சாலை கூட்டமைப்பு (Federation of Information Technology Industries of Sri lanka) (FITIS) என்ற தனியார் நிறுவனமும் நைற்றாவும் இணைந்து மேற்கொள்ளவிருக்கும் ஜசிடிரி (International Competency Certification of Digital Training) அதாவது டிஜிட்டல் பயிற்சியில் சர்வதேசதகுதியுள்ள சான்றிதழை பெறுவதற்கான கூட்டு பயிற்சிமுறைமை ஒன்றை வழங்குவதற்கான ஒப்பந்தம் கைசாத்திடும் நிகழ்வு இன்று(27.03.2019)நைற்றா தலைமையகத்தில் நடைபெற்றது.
இந்த தொழிற்துறையில் 2 லட்சம் பேருக்கு 2020 ஆம் ஆண்டுக்குள் தொழில்வாய்ப்புகளை வழங்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளபோதும் 80 ஆயிரம் பேரே உள்ளனர். இன்னும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேருக்கான தேவையுள்ளது என்பதை கருதில் கொண்டே இந்த முயற்சி முன்னெடுக்கப்படவுள்ளது.
இதில் FITIS நிறுவனத் தலைவர் கலாநிதி கீர்த்சிறி மஞ்சநாயக்க உட்பட இந்நிறுவத்தின் முக்கியஸ்தர்களும், நைற்றா நிறுவனத் தலைவர் உட்பட முக்கிய அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதன்போது நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்தாவது:-
கடந்த வாரங்களில் தனியார்துறைகளில் பயிற்சிசார் தொழில்துறை வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. குறிப்பாகத் தனியார் வைத்தியசாலைகளில் தாதிமார்களுக்கான வேலைவாய்ப்புகளைப் பெறும் நோக்கில் பயிற்சிகள் மூலமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் கார்கிள்ஸ் நிறுவனத்துடனும் பேச்சு நடைபெற்றது.
இதேபோன்று வெளிநாடுகளில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்களில் மேலதிக கல்விவாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மற்றொரு முயற்சியாகவே டிஜிட்டல் தகவல் தொழில்நுட்பத்துறையில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் கடந்த வாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் நாம் மேற்கொண்ட புதிய நடவடிக்கையாக பலவருடகாலமாக முன்பள்ளி ஆசிரிய பணியை மேற்கொண்டவர்களுக்குச் NVQ4 சான்றிதழ் வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது நாம் எதிர்பார்க்காத வகையில் 1200க்கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இவர்களிடம் இருந்து கிடைத்த விண்ணப்பங்களில் பிரகாரம் முதற்கட்டமாக 217 பேருக்கு கூடிய விரைவில் இச்சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறே எதிர்காலத்தில் தொழில்துறை வாய்ப்புகளை அறிந்து அவற்றுக்குரிய பயிற்சிகளை வழங்குவதன் ஊடாக வேலை வாய்ப்புகளை பெறும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருக்கிறோம் என்றார்.
இவ்வாறே எதிர்காலத்தில் தொழில்துறை வாய்ப்புகளை அறிந்து அவற்றுக்குரிய பயிற்சிகளை வழங்குவதன் ஊடாக வேலை வாய்ப்புகளை பெறும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருக்கிறோம் என்றார்.