A+ A-

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையையும், பாராளுமன்ற தேர்தல் முறைமையையும் மாற்றுவதற்கு கால அவகாசம் போதாது. கண்டியில் அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு

நாங்கள் ஆட்சிக்கு வரும்போது இந்த அரசியலமைப்பை மாற்றுவதாக உறுதியளித்தோம். அதன்  ஒரு பகுதியை 19வது திருத்தத்தினூடாக செய்தோம். ஆனால் இப்பொழுது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையையோ பாராளுமன்ற தேர்தல் முறைமையையோ மாற்றுவதற்கு கால அவகாசம் போதாது. அவ்வாறு செய்ய போனால் எல்லாம் குழம்பி போகலாம். அதிகார பகிர்வூ என்ற கோரிக்கையூடன் 30 ஆண்டுகால யூத்தத்தில் சிக்கிக் கொள்ள நேர்ந்துவிட்டது. யூத்தத்தின் போதும் தமிழ் மக்கள் கேட்டது இவ்வாறான அரசியல் அமைப்பு திருத்தத்தை அல்ல் முறையான அதிகாரப்பகிர்வைதான். தமிழ் மக்கள் மத்தியிலும்இ தமிழ் பேசும் மக்கள் மத்தியிலும் பிரச்சினைகள் உள்ளன. அவற்றை நிவர்த்திப்பதற்கு எங்களால் எவற்றையாவது செய்திருக்க முடியூம்.  குறிப்பாக இந்த அரசியல் அமைப்பை தயாரிக்கும் வழிநடத்தல் குழுவினரான எங்களிடம்  முதலமைச்சர்கள் அபிப்பிராயங்கள் தெரிவித்தபோதுஇ வடக்கை விட, தென்னிலங்கையில் உள்ளவர்கள்தான் அதிகார பரவலாக்கத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு அதிகமான அதிகாரங்களை வழங்க வேண்டுமென கோரினர். முன்வைக்கப்பட்டவற்றில்  நாம் சிலவற்றை ஏற்றுக் கொண்டோம். குறைந்தபட்சம் எல்லா கட்சிகளாலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய யோசனைகளில் இணக்கப்பாட்டுக்கு வர முடிந்தது. 30 ஆண்டுகால கோர யூத்தத்தினால் கைவிடப்பட்டு போன பிரச்சினைகளை வெறுமனே புறந்தள்ளிவிட முடியாது. நேற்றும் கட்சி தலைவர்களான நாங்கள் ஜனாதிபதியை சந்தித்து உரையாடினோம்.

இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்இ நகர திட்டமிடல்இ நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சருமான ரவூ+ப் ஹக்கீம்இ கண்டி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (1) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் தெரிவித்தார். 

நாட்டின் சகல மாவட்டங்களிலும் ஆயிரம் கிராமங்களை மையப்படுத்திஇ அமைச்சரின் எண்ணக்கருவில் உருவான “பிரஜா ஜல அபிமானய” என்ற கருத்திட்டத்தின் அங்குரார்பண நிகழ்வை கண்டி மாவட்டத்தில் உடபலாத்த பிரதேசத்தில் கலத்த என்ற கிராமத்தில் ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார். சமகாலத்தில் 25 மாவட்டங்களிலும் ஒவ்வொரு கிராமத்தில் இந்நிகழ்வூ இடம்பெற்றது குறிப்பிடத்தக்கதாகும். 
அமைச்சர் ஹக்கீம் உரையாற்றும்போது மேலும் தெரிவித்ததாவது: 

எதிர் கட்சியினர் விகாரைகள் தோறும் சென்று நாங்கள் இந்நாட்டின் ஒருமைபாட்டுக்கு குந்தகம் விளைவிக்க போவதாக கூறித் திரிகின்றனர். பௌத்த சமயத்துக்குரிய முதன்மை அந்தஸ்த்தை இல்லாமல் செய்ய எத்தனிப்பதாகவூம் அவர்கள் கூறி வருகின்றனர்.  அவை முற்றிலும் பொய்யானவை. அதிகார பரவலாக்கத்தை மேலும் விரிவூ படுத்த போகின்றௌம். அதன் மூலம் குறைந்த பட்சம் கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றையாவது நிறைவேற்ற முடியூம். ஜனாதிபதியிடம் நான் இதனை கூறிய போது அதையாவது செய்வோம் என அவரும் ஏற்றுக்கொண்டார். அதன்படி அடுத்த கிழமைக்குள் கட்சி தலைவர்களை அழைத்து பேசி தீர்மானம் ஒன்றுக்கு வர உடன்பட்டார். 

தற்பொழுது நாம் முன்னெடுத்துள்ள ஆயிரம் கிராமங்களுக்கான நீர்வழங்கல் கருத்திட்டம் நாடு முழுவதிலும் சமூக மட்டத்தில் ஊர்மக்களை தொடர்பு படுத்தி அவர்களது ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட இருக்கிறது. 25 மாவட்டங்களையூம் சேர்ந்த இதன் பிரதிநிதிகளை அலரி மாளிகைக்கு அழைத்து பிரதமரின் தலைமையில் இந்த மாதத்தில் ஒரு ஒன்றுகூடலை நடத்த இருக்கின்றௌம். 

இந்த கருத் திட்டத்தை முன்வைத்த போது அதனை நிதி அமைச்சரும் ஏற்றுக் கொண்டார். வரவூ செலவூ திட்டத்துக்கு முன்னதாகவே இதனை செயல்படுத்த தொடங்குமாறும் கேட்டுக் கொண்டார். நிதியமைச்சினூடாக இதற்கு உதவூவதாகவூம் கூறினார். நிதியமைச்சரின் உடன்பாட்டுடன் கிராமங்கள் தோறும் சென்று நீரூற்றுகள்இ நீர்ச்சுனைகள் போன்ற நீர் மூலங்களைஇ அடையாளம் கண்டதன் பயனாக அவற்றை மையப்படுத்தி இந்தத் செயல் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.  இவற்றை பேணி பாதுகாத்து பராமரிப்பது பிரதேச மக்களின் பொறுப்பாகும். 

நீர் மூலங்கள் மற்றும் தோணாக்களை அசுத்தமடையாமலும்இ சேதமாகாமலும் பாதுகாப்பதற்காக விசேடமான ஒரு அதிகார சபையை நியமிப்பதற்கு நான் அமைச்சரவையில் யோசனையொன்றை முன்வைத்துள்ளேன். அதனை செய்வதற்கு ஜனாதிபதியின் சம்மதத்துடன் அந்த விடயம் இப்பொழுது கையாளப்பட்டு வருகிறது என்றார். 
இந்நிகழ்வில் நகர திட்டமிடல் நீர்வழங்கல் ராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்தனஇ இராஜாங்க அமைச்சின் செயலாளர் கே.என். மங்கல திஸ்ஸஇ தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜயதிலக்க ஹேரத் ஆகியோர் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். 


நாச்சியாதீவு பர்வின்