நடுஊற்று பிரதேசத்திற்கான விளையாட்டு மைதான காணியை விளையாட்டு கழக உறுப்பினர்களிடம் கையளித்தல்
கிண்ணியா நடுஊற்றுப் பிரதேச இளைஞர்களின் மிக நீண்ட காலத்தேவையாக இருந்து வந்த விளையாட்டு மைதானத்திற்கான காணியை நடுஊற்று வட்டார பிரதேச சபை உறுப்பினர் ஹுஸைனின் வேண்டுகோளுக்கிணங்க முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம.எஸ். முயற்சியினால் இரண்டு ஏக்கர் காணியை கிண்ணியா பிரதேச செயலாளரின் ஒத்துழைப்போடு பெற்று கழக உறுப்பினர்களிடம் ஞாயிற்றுக்கிழமை (10) கையளிக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் கிண்ணியா பிரதேச சபைத் தவிசாளர் சனூஸ், பிரதேச சபை உறுப்பினர் ஹுஸைன் மற்றும் பிரதேச மக்களும் கலந்து கொண்டனர்.