medicare நிறுவனம் சுகாதார அமைச்சுடன் இணைந்து நடத்தி வரும் வைத்திய கண்காட்சியின் 10 ஆவது வருட கண்காட்சி சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் ஆகியோரால் இன்று காலை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இன்று முதலாம் திகதி முதல் மூன்றாம் திகதி வரை இக்கண்காட்சி இடம்பெறும்.220 உள்நாட்டு மற்றும் சர்வதேச வைத்திய நிறுவனங்கள் அவற்றின் வைத்திய சேவைகளையும் நவீன வைத்திய உபகரணங்களையும் காட்சிப்படுத்துகின்றன.15 ஆயிரத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் அவற்றைப் பார்வையிட்டு தேவையான வைத்திய தகவல்களை பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
சர்வதேச மற்றும் உள்நாட்டு வைத்திய நிபுனர்களையும் சேவைகளையும் ஒரே கூரையின்கீழ் கொண்டு வந்து மக்களுக்கு சிறந்த சேவையைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இந்தக் கண்காட்சி 10 வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்து வைக்கப்பட்டு ஒவ்வொரு வருடமும் தொடர்ச்சியாக வெற்றிகரமாக இடம்பெற்று வருகின்றது.
கடந்த காலங்களை போன்று இந்த வருடமும் மக்கள் இதன்மூலம் அதிக நன்மைகளை பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.சுகா தார அமைச்சு வழங்கி வரும் சிறந்த வைத்திய சேவைகளில் இதுவும் ஒன்று என்று சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்தார்.
[ஊடகப் பிரிவு]