A+ A-

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி பிரதிநிதிகள் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு கெளரவம்


இந்தியாவிலிருந்து வருகைதந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிப் பிரதிநிதிகள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீமை இன்று (27) பாராளுமன்றத்தில் சந்தித்து, பொன்னாடை போர்த்திக் கெளரவித்தனர்.  

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் முனைவர் எம்.ஏ.எம். நிஜாம், மாநில மகளிர் லீக் பொருளாளர் ஷாஸ்மினாஸ், திருச்சி ஊடகவியலாளர் எம்.கே. ஷாகுல் ஹமீது ஆகியோர் சமகால அரசியல் நிலவரங்கள் குறித்து இதன்போது அமைச்சருடன் கலந்துரையாடினர்.

இச்சந்திப்பின்போது, இராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மெளலானா, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் ஆகியோரும் உடனிருந்தனர்.

ஊடகப்பிரிவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்