A+ A-

கிண்ணியா பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களில் 'கம்பெரலிய ' வேலைத்திட்டங்கள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீகினால் ஆரம்பித்து வைப்பு










பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீகினால் 2019ம் ஆண்டுக்கான கம்பெரலிய வேலைத்திட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை (10) கிண்ணியா பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களான ஆயிலியடி வான்-எல, சூரங்கள், துவரங்குளம், குட்டியாகுளம், முனைச்சேனை மற்றும்  மாகாத் நகர் போன்ற பிரதேசங்களில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்டத்தில் மூன்று தொகுதிகளுக்குமான மொத்த நிதி ஒதுக்கீடு  178 மில்லியன் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீகின் திட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வைபவத்தில் கிண்ணியா பிரதேச சபைத் தவிசாளர் சனூஸ், கிண்ணியா நகர சபையின் பிரதித் தவிசாளர் சபரின் (நளீம்), கிண்ணியா நகர சபை உறுப்பினர்களான நிவாஸ், கலிபத்துல்லாஹ், ஆசாத், கிண்ணியா பிரதேச சபை உறுப்பினர்களான அனிபா, இப்னுல்லாஹ், ஹுஸைன், நஸீர், கிண்ணியா பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீகின் பிரத்தியேகச் செயலாளருமான முஹம்மது நிஹார், கன்சுல்லாஹ், கிண்ணியா நகர சபையின் முன்னாள் பிரதித் தவிசாளர் சட்டத்தரணி முஜீப் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீகின் சகோதரர் பரீஸ் மற்றும் ஏனையோர் கலந்து கொண்டனர்.