A+ A-

அரசாங்கத்தினால் பாரிய நிதி ஒதுக்கீடு செய்யும் அமைச்சுக்களில் ஒன்றாக சுகாதார அமைச்சு விளங்குகின்றது. அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.



தெல்தொட்ட அரசாங்க வைத்தியசாலையில் கடமையாற்றுவதற்கு தாதியமார் பத்து பேர் தேவைப்படுகின்ற நிலையில் ஐவரே பணியாற்றுகின்றனர். இந்த ஆளணி பற்றாக்குறை அவசரமாக தீர்த்துவைக்கப்பட வேண்டியுள்ளது என கண்டி மாவட்டத்தை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

தெல்தொட்டை அநுர டெனியல் ஞாபகார்த்த அரச வைத்தியசாலையில் 370 இலட்சம் ரூபாய் செலவில் வெளி நோயாளர் பிரிவுக்கான கட்டடத்திற்கான ஆரம்ப வேலைகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு ஞாயிற்றுகிழமை (17) நடைபெற்ற போது அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை கூறினார்.

அங்கு உரையாற்றும் போது அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது,
இந்த தெல்தொட்ட வைத்தியசாலை பிரதேச வைத்தியசாலையாக 'ஏ' தரத்திற்கு தரமுயர்த்தப்பட்டமையையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன். இந்த வைத்தியசாலையின் கட்டட நிர்மாணப் பணி ஆரம்பித்தமை தொடர்பில் தனியொரு வரலாறு இருக்கின்றது.

சிறிது காலத்திற்கு முன்னர் கண்டி மாவட்ட மருத்துவ அத்தியட்சகர் அலுவலகத்தில் நானும் இராஜாங்க அமைச்சர் பைசல் காஸிம், பிராந்திய பணிப்பாளர் உட்பட முக்கியஸ்த்தர்களும் இணைந்து கண்டி மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளில் நிலவும் குறைபாடுகள், கட்டட தேவைப்பாடுகள், உட்கட்டமைப்பு வசதிக் குறைபாடுகள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் குறித்து நீண்ட கலந்துரையாடலொன்றை மேற்கொண்டிருந்தோம்.

தெல்தொட்ட அரசாங்க வைத்தியசாலையில் கடமையாற்றுவதற்கு தாதியமார் பத்து பேர் தேவைப்படுகின்ற நிலையில் ஐவரே பணியாற்றுகின்றனர். இந்த ஆளணி பற்றாக்குறை அவசரமாக தீர்த்துவைக்கப்பட வேண்டியுள்ளது.

அத்துடன் இந்;த கட்டடம் இன்னும்; விஸ்தரிக்கப்பட வேண்டும். இத்தருணத்தில் இராஜாங்க அமைச்சர் பைசல் காஸிமுடன் இந்த கட்டட நிர்மாணத்திற்காக ஒத்துழைத்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்;கின்றேன். ஏனெனில், இதற்கான அமைச்சரின் ஒத்துழைப்பு அபரிதமானது. 

அரசாங்கத்தினால் பாரிய நிதி ஒதுக்கீடு செய்யும் அமைச்சுக்களில் ஒன்றாக சுகாதார அமைச்சு விளங்குகின்றது. நாடெங்கிலும் காணப்படும் வைத்தியசாலைகளில் நிலவும் குறைப்பாடுகளையும் மற்றும் ஏனைய தேவைகளையும் சரிவர இனங்கண்டு நிவர்த்தி செய்யத்;தக்க வகையில் இதற்கான நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

குறிப்பாக, உயர் கல்வி அமைச்சர் என்ற வகையில் அந்த துறையில் மகத்தான மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்ற நிலையில், சுகாதார அமைச்சுடன் இணைந்து, பல்கலைக்கழக பாடநெறிகளுள் துணை மருத்துவ  துறை சார்ந்த பட்டப்படிப்புப் பாடத் திட்டமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளோம்.

இதற்கான முன்னெடுப்புடுக்கள் வெற்றிகரமாக அமைந்திருப்பதற்கான சாத்தியக் கூறுகள் தென்படுகின்றன. இந்த கற்கை நெறி பட்டப்படிப்பு தரத்தில் வடிவமைக்கப்பட்டிருப்பதனால் வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதற்கும் வசதியாக இருக்கும்.

தெல்தொட்ட பிரதேசத்தில் காணப்படும் இன்னொரு முக்கியமான குறைப்பாடாக நிலக்கீழ் நீர்த் தட்டுப்பாடு நிலவுவதாக மக்கள் நீண்ட காலமாக விசனம் தெரிவிக்கின்றனர்.  இப்பிரதேசத்தை சூழவுள்ள ஏனைய கிராமங்களை சேர்ந்த விவசாயிகளின் எதிர்ப்புகள் காரணமாக நூல் கந்துர செயற்றிட்டத்தின் மூலம் இப்பிரதேசத்திற்கு நீர் வழங்க அனுமதிகளை பெறுவதில் பலவித சிக்கல்கள் உள்ளதை அனைவரும் அறிந்துள்ளனர். 

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஆஸ்திரியா வழங்க முன்வந்துள்ள 12மில்லியன் டொலர் நிதியுதவியை பெற்றுக்கொண்டு, எதிர்காலத்தில் இத்திட்டத்தை முன்னெடுப்பதில் காணப்படும் சிக்கல்களை நிவர்த்தி செய்து இந்த நூல் கந்துர செயற்றிட்டத்தை ஆரம்பித்து இப்பிரதேச மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுத் தருவேன்.

எனது அமைச்சின் கீழுள்ள தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள பிரஜா ஜல அபிமானி எனும் 1000 கிராமங்களுக்கு நீர் வழங்கும் திட்டத்தினூடாக 1000 கிராமங்கள் நன்மையடையவுள்ளன என்றார்.

இந்நிகழ்வில் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காஸிம், ஐக்கிய தேசிய கட்சியின் ஹெவாஹெட்ட தொகுதி அமைப்பாளர் சாந்தி கோங்காஹகே, அமைச்சரின் பிரத்தியக செயலாளர் எம்.நயிமுல்லாஹ், மருத்துவ உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டனர்.