A+ A-

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முயற்சியில் மண்முனைப்பற்று மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவுகளில் மக்களின் நீண்டகால கனவாக இருந்த பல்வேறு வீதிகள் ஒருங்கிணைந்த வீதி(I Road) திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.



ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான றவூப் ஹக்கீம் மற்றும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களினதும் தொடர் முயற்சிகளின் பலனாக ஒருங்கிணைந்த வீதி(I Road) திட்டத்தின் கீழ் மண்முனைப்பற்று பிரதேச செயலகப்பிரிவுக்குற்பட்ட பாலமுனை,காங்கேயனோடை மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட பூநொச்சிமுனை, மஞ்சந்தொடுவாய்  பிரதேசங்களில் மக்களின் நீண்டகாலக்கனவாக காணப்பட்ட முக்கியமான பல்வேறு வீதிகள் கார்ப்பட் வீதிகளாக புனரமைக்கப்படவுள்ளதாக நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சின் இணைப்புச் செயலாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளருமான யு.எல்.எம்.என்.முபீன் தெரிவித்தார்.

மிக நீண்டகாலமாக பேசுபொருளாக காணப்பட்ட மத்திய அரசினால் செயற்படுத்தப்படவுள்ள இந்த ஒருங்கிணைந்த வீதி(I Road) திட்டம் தொடர்பில் பல்வேறு முயற்சிகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான றவூப் ஹக்கீம் மற்றும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சருமான செய்யித் அலி ஸாஹிர் மௌலானா ஆகியோர் தொடராக மேற்கொண்டுவந்தனர்.அந்த வகையில் முக்கியமான பல வீதிகளை கார்ப்பட் வீதிகளாக அமைப்பதற்குரிய அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.மிக முக்கியமான வீதிகள் இந்த திட்டத்தினூடாக புனரமைக்கப்பட்ட வேண்டுமென நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச்செயலாளர் யு.எல்.எம்.என்.முபீன் அமைச்சர் றவூப் ஹக்கீம் மற்றும் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா ஆகியோரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.அந்த வகையில் பின்வரும் வீதிகள் காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் கார்ப்பட் வீதிகளாக புனரமைப்பு செய்யப்படவுள்ளது.

1.பூநொச்சிமுனை வீதி,நாவற்குடா-0.85 கிலோமீற்றர் 
2.புதிய பாலமுனை வீதி,மஞ்சந்தொடுவாய்-1.28 கிலோமீற்றர் 
3.ஹிஸ்புல்லாஹ் வீதி,மஞ்சந்தொடுவாய்-0.96 கிலோமீற்றர் 
4.காங்கேயனோடை ஒல்லிக்குளம் மாவிலங்குதுறை வீதி-2.75 கிலோமீற்றர் 
5.பாலமுனை வீதி-1.21 கிலோமீற்றர் 
6.மீரா பள்ளிவாயல் வீதி,பாலமுனை-0.47 கிலோமீற்றர் 
7.பாலமுனை பிரதான வீதி-0.30 கிலோமீற்றர் 
8.காங்கேயனோடை பிரதான வீதி-0.84 கிலோமீற்றர்  

இவ்வேலைத்திட்டம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் வட கிழக்கு மாகாணங்களில் பின்தங்கிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்படவுள்ளது.கடந்த 52 நாட்கள் அரசில் ஏற்பட்ட குழப்பத்தின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது ஆதரவளிப்பதற்கு பல்வேறு சமூகம் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்திருந்தது.அந்த கோரிக்கைகளில் கிழக்கு மாகாணத்தில் இந்த வீதி அபிவிருத்தி திட்டடமானது முதன்மைப்படுத்தப்பட வேண்டுமென்பது முக்கிய கோரிக்கையாகும்.இத்திட்டங்கள் தொடர்பில் இந்த அரசிலும்,கடந்த அரசிலும் அமைச்சர் றவூப் ஹக்கீம் வீதி அபிவிருத்தி அமைச்சர்களாக கடமையாற்றிய பலரையும் சந்தித்து கலந்துரையாடியதும் குறிப்பிடத்தக்கது.ஏற்கனவே ஊவா மாகாணத்தில் இத்திட்டத்தின் கீழ் பல வீதிகள் புனரமைக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளது.இவ்வேலைத்திட்டங்கள் எதிர்வரும் ஏப்ரல்,மே மாதம் அளவில் ஆரம்பிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. 


(ஆதிப் அஹமட் )