A+ A-

தோப்பூரில் ISRC நிறுவனத்தின் உதவியுடன் Qatar Charityயின் வீடமைப்புத்திட்டம் கையளிப்பு










மூதூர் பிரதேச சபை உறுப்பினர் தானீஸின் வேண்டுகோளுக்கிணங்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீகின் முயற்சியினால் ISRC நிறுவனத்தின் உதவியுடன் Qatar Charityயின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் தோப்பூரில் 22 வீடுகள் அமைக்கப்பட்டு திங்கள்கிழமை (04) மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் Qatar Charityயின் இலங்கைக்கான வதிவிட பணிப்பாளர் ஹாலித் ஹெளதா, ISRCயின் பணிப்பாளர் மிஹ்லார், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஜே.லாஹிர, ஆர்.எம்.அன்வர், மூதூர் பிரதேச சபை தவிசாளர் அரூஸ், கிண்ணியா பிரதேச சபை தவிசாளர் சனூஸ், கிண்ணியா நகர சபை, மூதூர் பிரதேச சபை மற்றும் கிண்ணியா பிரதேச சபை உறுப்பினர்கள், சட்டத்தரணி முஜீப் உட்பட பிரதேச மக்களும் கலந்து கொண்டனர்.