A+ A-

கேகாலையில் கிராமிய நீர் வழங்கல் திட்டங்கள் அமைச்சர் ரவூப் ஹக்கமீனால் திறந்துவைப்பு







கேகாலை மாவட்டத்தில் பல்வேறு கிராமிய நீர் வழங்கல் திட்டங்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நேற்று (31) மக்கள் பாவனைக்காக திறந்துவைத்தார்.

உலக வங்கியின் 57 மில்லியன் ரூபா நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட கனேபல்ல கிராமிய குடிநீர் வழங்கல் மற்றும் சுகநல பாதுகாப்பு திட்டம் திறந்துவைக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் 10 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 457 குடும்பங்கள் பயனடையவுள்ளன

73 மில்லியன் ரூபா நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட ஹக்பெல்லாவ கிராமிய குடிநீர் வழங்கல் மற்றும் சுகநல பாதுகாப்பு திட்டமும் இதன்போது திறந்துவைக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் 10 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 486 குடும்பங்கள் பயனடையவுள்ளன.

அத்துடன் ருவன்வெல்ல, வெந்தல பிரதேசத்தில் விஸ்தரிக்கப்பட்ட குடிநீர் இணைப்பையும் அமைச்சர் இதன்போது திறந்துவைத்தார்.

இதேவேளை, புலத்கொகுபிடிய ஒருங்கிணைந்த கிராமிய குடிநீர் வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டுத் திட்டத்துக்கான ஆரம்ப வேலைகளையும் அமைச்சர் இதன்போது ஆரம்பித்துவைத்தார். உலக வங்கியின் 483 மில்லியன் ரூபா நிதியுதவியில் நிர்மாணிக்கப்படும் இத்திட்டத்தின் மூலம் 2000 பேர் பயனடையவுள்ளனர்.

ஊடகப்பிரிவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்