இனங்களுக்கிடையிலான ஒற்றுமை, புரிந்துணர்வு மூலம் நாட்டில் நிரந்தர சமாதானமும் ஐக்கியமும் ஏற்பட்டு இலங்கைத் திருநாட்டில் மூவின மக்களும் ஒற்றுமையாக வாழபிரார்த்திப்போம் என சிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத் ஏ.மஜீத் விடுத்துள்ள நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இவ்வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இஸ்லாமியர்களாகிய நாம் அமைதியாகவும் பொறுமையுடனும், செயற்பட்டு இப்புனிதமானபெருநாள் தினத்தில் எமது நாட்டில் நிலையான சமாதானம் ஏற்பட அனைவரும் இரு கரமேந்திபிரார்த்திக்க வேண்டும்.
முஸ்லிம் இளைஞர்கள் மிகவும் அவதானமாகவும் பொறுமையுடனும் செயற்படவேண்டியகாலகட்டத்தில் வீண் விளையாட்டுக்கள் பொழுதுபோக்குகளை தவிர்த்து அமைதியாகஇப்பெருநாளை கொண்டாடவேண்டும்.
அண்மைய அசம்பாவிதங்களின் பின்னர் கைதுசெய்யப்பட்டு சிறையில் வாடுகின்ற அப்பாவிமுஸ்லிம் சகோதர சகோதரிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். ஐக்கிய இலங்கைக்குள்மூவின மக்களும் சகோதரத்துவத்துடனும் சௌஜன்யத்துடனும் வாழ்வதற்கு இப்புனித பெருநாள்தினத்தில் பிரார்த்திப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.
(அஷ்ரஃப்கான்)