A+ A-

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச்செயலாளர் முபீன் அவர்கள் விடுத்துள்ள வாழ்த்துச்செய்தி



மலர்ந்திருக்கும் ஈதுல் பித்ர் நோன்புப்பெருநாள் நல் வாழ்த்துக்களை அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கும் தெரிவித்துக்கொள்வதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும்,காத்தான்குடி நகரசபையின் உறுப்பினருமான யு.எல்.எம்.என்.முபீன் விடுத்துள்ள விசேட வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வருட பெருநாளை இலங்கை முஸ்லிம்கள் சோதனைகளோடும் வேதனைகளோடும்  சந்திக்க வேண்டிய சூழலை சந்தித்திருக்கின்றோம்.இந்த தருணத்தில் எம்மைப்பற்றிய ஒரு சுய பரிசோதனையையும் நாம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.கடந்த காலங்களில் நாம் விட்ட தவறுகளை மீட்டிப்பார்ப்போம்.எதிர்கால இலங்கையில் எமது வாழ்க்கை ஒழுங்குமுறைகளை திட்டமிடுவோம்.
கடந்த 21/04/2019 தாக்குதலின் எதிரொலியாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள எமது மக்களின் விடுதலைக்காக இந்த சந்தர்ப்பத்தில் அதிகம் பிரார்த்திப்போம்.நாட்டின் அசாதாராண சூழ்நிலையினால் தங்களின் தொழில்களை இழந்து அல்லாடும் உறவுகளுக்காக முடிந்தளவானா உதவிகளை செய்திடுவோம்.அத்தோடு அண்மைய வன்செயல்களால் பாதிக்கப்பட்ட குருணாகல்,புத்தளம் மற்றும் கம்பஹா உள்ளிட்ட பிரதேச மக்களுக்கும் முடிந்தளவு உதவுவோம்.
மொத்தத்தில் முழு இலங்கை முஸ்லிம்களும் எதிர்நோக்குகின்ற சவால்களை வெற்றி கொள்ள அல்லாஹ்விடம் இரு கரம் ஏந்துவோம்.சமூக ரீதியான கூட்டுப்பொறுப்பு பற்றி சிந்திப்பதோடு அரசியல் இயக்க வேறுபாடுகளையும் கைவிட்டு பொதுத்தளத்தில் ஒன்று சேர வேண்டும்.பொறுமையையும்,சகிப்புத்தன்மையையும்,நிதானத்தையும் நாம் எந்த சந்தர்ப்பத்திலும் கடைப்பிடிக்க வேண்டும்.துஆக்களே நமது பலமாகும்.அல்லாஹ்விடம் அழுது அழுது பிரார்த்திப்போம். மீண்டுமொரு முறை அனைவருக்கும் இனிய ஈதுல் பித்ர் நல்வாழ்த்துக்கள் என யு.எல்.எம்.என்.முபீன் அவர்கள் விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச்செய்தியில் மேலும்  குறிப்பிடப்பட்டுள்ளது.

(ஆதிப் அஹமட் )