A+ A-

திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு






புலம் பெயர் நாட்டில் தொழில் புரிவோர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் நியாயமான ஆட்சேர்ப்பு பற்றி அறிக்கையிடல் தொடர்பான திருகோணமலை மாவட்ட பிரதேச ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு இடம் பெற்றுள்ளது.

சுதந்திர ஊடக இயக்கத்தினால் இன்று (29) திருகோணமலை சீ லோட்டஸ் பார்க் விடுதியில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் புலம் பெயர் நாட்டில் தாங்கள் எதிர்நோக்கும் பல பாதக தன்மைகள் தொடர்பில் எவ்வாறு புரிந்து கொள்வதும் அது தொடர்பான பூரண அறிவுத் திறனை எவ்வாறு அறிக்கையிடல் தொடர்பான விளக்கங்கள் ஊடகவியலாளர்களுக்கு இதன் போது வழங்கப்பட்டன.

சர்வதேச தொழிலாளர் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வரும் இக் குறித்த செயற் திட்டத்தினால் இலங்கையின் ஊடகவியலாளர்களுக்கு இவ்வாறான அறிவினை கொண்டு சேர்ப்பது தங்களது திட்டத்தின் நோக்கமாகும் என சுதந்திர ஊடக இயக்கத்தின் வளவாளர்  ஒருவர் இதன் போது தெரிவித்தார்.

இதில் சுதந்திர ஊடக இயக்கத்தின் தலைவர் விரன்ஜன ஹேரத், செயலாளர் லசந்த டீ சில்வா, பொருளாளர் தாஹா முஸம்மில் உள்ளிட்ட திருமலை மாவட்ட ஊடகவியலாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.