'பிரஜா ஜல அபிமானி கருத்திட்டத்தின்' கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ள 1000 கிராமங்களுக்கான குடிநீர் வழங்கல் திட்டத்தின் கண்டி மாவட்டத்திற்கான முதற் கட்ட 11 செயற்திட்டங்கள் தொடர்பான மீளாய்வு கூட்டமொன்று அமைச்சர் ஹக்கீம் தலைமையில் அண்மையில் பேராதனை, கேடம்பேவில் அமைந்துள்ள தேசிய நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிராந்திய சேவை மத்திய நிலையத்தில் நடைபெற்ற போதே அவர் இவற்றைத் தெரிவித்தார்.
உடுநுவர – எல்பிட்டிகந்த, பாத்தஹேவாஹெட்ட ரட்டேமுல்ல, தெல்தோட்டை, பத்தாம்பள்ளி, லிட்டில்வெளி, கலத சபுகஹாமுல, கடியஞ்சேனை, உலப்பனை, மாவத்துர என்பனவே கண்டி மாவட்டத்திற்கான இந்த 11 முதற் கட்ட குடிநீர் வழங்கல் திட்டங்களாகும்.
இதன்போது பிரஸ்தாப 11 செயற்றிட்டங்களுக்கும் பொறுப்பான கிராமிய அமைப்புக்களின் முக்கிஸ்தர்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி அமைச்சர் முன்னிலையில் தெரிவித்தனர். அவற்றை கவனமாக செவிமடுத்த அமைச்சர் ஹக்கீம், பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணப்பட்டு எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் அவை நிறைவு செய்யப்பட வேண்டுமென பணிப்புரை விடுத்தார்.
அமைச்சர் ஹக்கீம், அங்கு உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது,
எனது எண்ணக்கருவில் உதித்த 1000 பின்னதங்கிய கிராமங்களுக்கான 'பிரஜா ஜல அபிமானி' நீர் வழங்கல் திட்டங்களில் முதற் கட்டமாக 141 செயற் திட்டங்களுக்காக இவ்வாண்டுக்கான வரவு - செலவு திட்டத்தில் 1500 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த திட்டங்களினால் 258 கிராமங்களை சேர்ந்த 1,50,000 பேர் நன்மையடைவார்கள்.
அவ்வாறே அடுத்த ஆண்டு (2020) இரண்டாம் கட்டமாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள கிராமிய நீர் வழங்கல் திட்டங்களுக்காக 4500மில்லியன் ரூபாய்கள் இலங்கை அரசாங்கத்தினால் செலவிடப்படவுள்ளது. 2021ஆம் ஆண்டில் மூன்றாம் கட்டமாக மேற்கொள்ளப்படும் கிராமிய நீர் வழங்கல் திட்டங்களுக்காக 4000 மில்லியன் ரூபாய்களை செலவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபையின் செயலாற்று பணிப்பாளர் மஹிலால் த சில்வா, தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தின் பணிப்பாளர் எச்.எம்.ஜயதிலக ஹேரத், மத்திய மாகாண பிரதி பொது முகாமையாளர் மீகொட மற்றும் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எம்.நயிமுல்லாஹ் ஆகியோர் உட்பட அதிகாரிகளும், பிரதேச அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.