A+ A-

மக்களின் நீண்ட கால கோரிக்கையாகவிருந்த புதிய காத்தான்குடி பதுறியா குறுக்கு மற்றும் றிஸ்வி நகர் குறுக்கு வீதிகள் ரூபா 25 இலட்சம் செலவில் புனரமைக்கப்பட்டு வருகின்றது.

(ஆதிப் அஹமட்)

றிஸ்வி நகர் மற்றும் பதுறியா பிரேதச மக்களின் நீண்ட கால கோரிக்கையாக காணப்பட்ட புதிய காத்தான்குடி பதுறியா குறுக்கு மற்றும் றிஸ்வி நகர் குறுக்கு வீதிகள் ஆகிய இரண்டு வீதிகள்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச்செயலாளரும்,நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சின் இணைப்புச் செயலாளருமான யு.எல்.எம்.என்.முபீன் அவர்களின்  வேண்டுகோளின் பேரில் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செய்யித் அலிஸாஹர் மௌலானா அவர்களின் கம்பரெலிய நிதி ஒதுக்கீடு ரூபா 25 இலட்சம் செலில் கொங்கிறீற்று வீதியாக புனரமைக்கப்பட்டு வருகின்றது.

இவ்வீதியின் புனரமைப்பு பணிகளை நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சின் இணைப்புச் செயலாளர் யு.எல்.எம்.என்.முபீன் நேரில் சென்று பார்வையிட்டார்.

இவ்வீதியானது தாங்கள் பயன்படுத்தி வருகின்ற பிரதான பாதை எனவும் மழைகாலங்களில் இவ்வீதியினால் பயணம் செய்ய முடியாது பல சிரமங்களை அனுபவித்து வந்ததாகவும் அந்த சிரமங்களை தீர்த்து வைத்தமைக்காக நன்றிகளை தெரிவிப்பதாக இவ்விஜயத்தின் போது யு.எல்.எம்.என்.முபீன் அவர்களிடம் பிரதேச மக்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.