பாலமுனை சஹ்வா இஸ்லாமியா கல்லூரியில் கம்பரெலிய திட்டத்தின் கீழ் ஒரு மல்லியன் ரூபா நிதியின் மூலம் புணரமைப்புச் செய்யப்பட்ட மாணவர்களுக்கான கலாசார நிலைய திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.
எமது இலங்கை நாட்டினை பொறுத்தவரையில் பல்லிண சமூகங்கள் பின்னிப் பிணைந்து வாழுகின்ற ஒரு நாடாக காணப்படுகின்றது. இவ்வாறான சுழலில் நாம் நிதானமாகவும் புத்திசாதுரியமாகவும் பிறமதத்தவர்களை மதித்து வாழப்பழகிக் கொள்ள வேண்டும். இதற்கான வழிகாட்டல்களையும் தலைமைத்துவங்களையும் உலமாக்கள் எமது சமூகத்திற்கு வழங்குவது காலத்தின் தேவையாக இருநது கொண்டிருக்கின்றது. அண்மையில் எமது நாட்டில் ஏற்பட்ட பிரச்சினைக்கான காரணங்களை பார்க்கம் போது. இஸ்லாத்தை விளங்கியதில் ஏற்பட்ட குறைபாட்டின் காரணமாகவும். இஸ்லாத்தை படித்தவர்கள் அந்த மார்க்கத்தை விளங்கி செயற்பட்டதில் ஏற்பட்ட விளக்கமின்மை காரணமாகவும் இன்று ஏனைய மதத்தவர்களோடு முரண்படவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இன்று எமது சமூகத்தின் நிதானமற்ற தன்மை நமக்கே பாரிய தாக்கத்தை எற்படுத்திவிடுமோ என்கின்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று இஸ்லாமிய வரலாற்றையும் அதன் ஒழுங்கு முறைகளையும் தவறாக பரிந்து கொண்ட ஒரு சிலர் இஸ்லாத்தின் பெயரால் இஸ்லாத்திற்கு முரணான விடயங்களில் ஈடுபட்டு முஸ்லிம் சமூகத்தின் பெயரை கழங்கப்படுத்தும் செயலில் ஈடுபட்டதானது கவலைக்குரிய விடயமாகும். அதுமாத்திரமன்றி இந்த நாட்டில் முஸ்லிம் சமூகத்திற்கெதிரான வெளிநாட்டு சக்திகளும் ஒரு சில அரசியல் தலைமைகளும் முஸ்லிம்களை பிறமதத்தவர்களுடன் முட்டி மோதும் செயற்பாட்டினை அரங்கேற்றியுள்ளனர்.
இவ்வாறான செயற்பாட்டிற்கு இனவாதிகள் கைக்கொண்ட விடயம் இஸ்லாத்தை பிழையாக விளங்கியவர்களைக் கொண்டே இதன் பிண்னணியில் ஈடுபடுத்தியுள்ளனர். இதற்கு எமது நாட்டிலுள்ள ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகம் சோரம் போகவில்லை. இந்த நாட்டிலுள்ள முஸலிம் சமூகம் அடிப்படைவாதத்தையோ பிறமதத்தவர்களுடன் முரண்படுவதையோ ஒரு போதும் விரும்பவில்லை. இஸ்லாம் மார்க்கம் சாந்தி சமாதானத்தை விரும்புகின்ற ஒரு மார்க்கமாகும். இன்று எமது நாட்டில் மாத்திரமன்றி இஸ்லாத்தின் பெயரால் ஆரம்பிக்கப்பட்ட கொள்கைகள் என்று கூறிவிட்டு சமூகத்தின மத்தியில்; குழப்பங்களை ஏற்படுத்தி விட்டு தமது செயல் மூலம் உலகளாவிய ரீதியில் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் செயல்திட்டத்தில் இன்று மேற்குலக தீய சக்திகள் முனைந்து கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறான செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து எதிர்கால சமூகத்திற்கு ஏற்றவாறு சிறந்த கற்றிறிந்த உலமாக்களை உருவாக்க வேண்டியது காலத்தின் தேவையாக இருந்து கொண்டிருக்கின்றது. எனவே அரபுக் கல்லூரிகளின் நிருவாகத்தினருக்கும் அதன் அதிபர் ஆசிரியர்களும் இவைபற்றி சிந்திப்பதது அவசியமாகும் என்றார்.