(றியாத் ஏ.மஜீத்)
முன்னாள் இராஜாங்க அமைச்சர்
எச்.எம்.எம்.ஹரீஸின் அழைப்பின் பேரில் தென்கொரிய முன்னாள் பிரதி நிதியமைச்சர் ஓஹ்வாங் யங் தலைமையிலான பல்தேசிய கம்பனிகளின் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையிலான சந்திப்பு இன்று (24) சனிக்கிழமை பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பில் தென்கொரிய பிரதிநிதிகள், இலங்கையில் தென்கொரிய
பல்தேசிய கம்பனிகளின் முதலீட்டாளர்கள் முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பான சாத்தியப்பாடுகள் குறித்தும் நாட்டின் அபிவிருத்தி தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடினர்.
இதன்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கையில் தென்கொரிய
பல்தேசிய கம்பனிகளின் முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை தாராளமாக மேற்கொள்ள முடியும் எனவும் இதற்கான சகல ஏற்பாடுகளையும் எமது அரசாங்கம் செய்துதரும் எனவும் தென்கொரிய பிரதிநிதிகளிடம் உறுதியளித்தார்.