வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் நடைமுறைப் படுத்தப்பட்டுவரும் விடயங்களை ஊடகப் பிரச்சாரத்தின் மூலம் மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக இன்று (08. 08. 2019) வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் ஆரம்பித்து வைத்ததுடன் வெளிநாட்டில் வேலை செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கான நஸ்டஈடும் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர கலந்து கொண்டதுடன் அமைச்சர் ஹரீன் பெர்னான்டோ, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.தௌபீக், ஹெக்டர் அப்புகாஹாமி, ஹர்சன ராஜகருனா, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத் தலைவர் ஹில்மி, பொது முகாமையாளர் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.