நிறைவேற்று
அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி
முறியடிக்கப்பட்டுள்ளது. எனவே, தற்போதைக்கு
அதைப்பற்றி அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்,
அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
மாத்தளை ஆமினா
தேசியக் கல்லூரியில் மாணவ தலைவர்களுக்கு இலச்சினை அணிவிக்கும் நிகழ்வு சனிக்கிழமை
(21) நடைபெற்றபோது அதில் பிரதம
அதிதியாக கலந்துகொண்ட பின், ஊடகவியலாளர்களின்
கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார்.
சக பங்காளிக்
கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தாம நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை
நீக்கும் முயற்சிக்கு நாங்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருக்கின்றோம்.
எங்களது எதிர்ப்பின் பின்னர் குறித்த முயற்சி கைவிடப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக்
கட்சியின் ஜனரஞ்சக வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படுவதை தடுக்கும் பின்னணியில் இந்த
முயற்சி மேற்கொள்ளப்பட்டதா என்ற சந்தேகம் எல்லோர் மத்தியிலும் எழுந்திருக்கின்றது.
எது எவ்வாறாக
இருப்பினும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் சரியான நேரத்தில் சரியான
முடிவை அடுத்த வாரமளவில் அறிவிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்றார்.