A+ A-

மஹிந்தவின் ஆட்சியில் அழுத்கமவை எரித்த குழுவே இந்த ஆட்சியிலும் அதே வேலையைச் செய்தது. நிந்தவூரில் இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம்.



கடந்த அரசில் அழுத்கமவில் கலவரம் செய்த அதே குழுதான் இந்த ஆட்சியிலும் கலவரத்தை ஏற்படுத்தியது.முஸ்லிமாக்கள் கடைகள்,வீடுகளை எரித்தது.ஐக்கிய தேசிய கட்சி அரசுக்கு சேறு பூசுவதற்காகாகவேதான் இவ்வாறு செய்தார்கள்.அந்தக் குழு இன்னுமிருக்கு.தேர்தல் முடியும் வரை வாய் மூடி இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் நிந்தவூரில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது கூறினார்.அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்;

ஜேவிபி முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கும் கட்சிபோல் எல்லோரும் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.அது அவர்களின் வாக்கு வங்கியை அதிகரிக்கும் திட்டமாகும்.அவர்கள் தமிழர்களுக்காகவும் பேசித் திரிகிறார்கள்.

ஒரு நாடு ஒரு சட்டம் என்ற திட்டத்தைக் கொண்டு வர விரும்புபவர் கோட்டா.அடுத்தது ஜேவிபி.இவர்கள் இரண்டு பேரும்தான் ஒரு நாடு ஒரு சட்டம் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர்.எங்களது இஸ்லாமிய சட்டத்தில் கை வைப்பதுதான் இந்த ஒரு நாடு ஒரு சட்டம் என்பது.

திருமனச் சட்டம்,ஹாதிச் சட்டம் எல்லாவற்றிலும் கை வைப்பதுதான் நோக்கம்.முஸ்லிம் எம்பிக்களாகிய நாங்கள் இதைப் பாதுகாப்பதற்காக நாடாளுமன்றில் போராடி வருகிறோம்.21 எம்பிக்களும் ஒன்றிணைந்து நின்று இது தொடர்பில் பலருடன் பல சந்திப்புக்களை நடத்தியுள்ளோம்.

இதற்கெல்லாம் காரணம் சஹ்ரான்தான்.அவர் பார்த்த வேலையால்தான் எமக்கு இந்த நிலைமை.ஆகவே.இளைஞர்கள் கொஞ்சம் சிந்தியுங்கள்.ஜேவிபிடம் போய் தொழில் எடுக்க முடியாது.

கோட்டாவுக்குப் போகின்ற முஸ்லிம்களின் வாக்குகளைத்தான் தன் பக்கம் திருப்புவதாக ஜேவிபி கூறுகிறது.கோட்டாவை ஜேவிபி விரும்பவில்லை என்பதுதான் இதன் அர்த்தம்.ஜேவிபியும் சஜித்தின் வெற்றியைதான் விரும்புகிறார்கள்.

ஜேவிபி வெல்லாது என்று அவர்களுக்கும் தெரியும்.அடுத்த பொதுத் தேர்தலில் வாக்குகளை அதிகரிப்பதற்காகவே ஜேவிபி இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறது.நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதே திட்டம்.

வடக்கு-கிழக்கிற்கு வெளியே உள்ள முஸ்லிம்கள் மிகவும் துன்பப்படுகிறார்கள்.கடைகள்,வீடுகள் எரிக்கப்பட்டன.கடந்த அரசில் அழுத்கமவில் கலவரம் செய்த அதே குழுதான் இந்த ஆட்சியிலும் கலவரத்தை ஏற்படுத்தியது.கடைகள்,வீடுகளை எரித்தது.

ஐக்கிய தேசிய கட்சி அரசுக்கு சேறு பூசுவதற்காகாகவேதான் இவ்வாறு செய்தார்கள்.அந்தக் குழு இன்னுமிருக்கு.தேர்தல் முடியும் வரை வாய் மூடி இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஞானசாரவையும் இரத்தின தேரரையும் பாருங்கள்.அமைதியாக இருக்கிறார்கள்.எங்காவது அவர்கள் பேசுகிறார்களா? இல்லை.அமைதியாக இருக்கிறார்கள்.முஸ்லிம்களின் வாக்குகளை பெறுவதற்காக.16 ஆம் திகதிக்கு பின்பே வாய் திறப்பார்கள்.

வெறுப்பூட்டும் பேச்சை யார் பேசினாலும் அவர்களை சிறையில் அடைப்பேன் என்று சஜித் கூறியுள்ளார்.அப்படி கதைத்ததால்தான் ஞானசார சிறையில் அடைக்கப்பட்டார்.அவரை விடுவிப்பதற்காகப் போராடியவர் ஹிஸ்புல்லாஹ்.

ஹிஸ்புல்லாஹ்வுக்கு தேசிய பட்டியல் தேவை.அடுத்தது அவரது பல்கலைக்கழகத்தைக் காப்பாற்ற வேண்டும்.இதற்காகவே இப்போது ஆட்டம் போடுகிறார்.கடந்த முறை கோடிக்கணக்கில் பணம் செலவு செய்தார்.வெல்ல முடியவில்லை.

எங்கள் தலைவர் ரவூப் ஹக்கீம்தான் அவரது பல்கலைக்கழகத்தைப் பாதுகாத்தார்.ஹசன் அலி,அதாவுல்லா எல்லோரும் தேசிய பட்டியலுக்காகவே கோட்டாவுக்கு ஆதரவு வழங்குகின்றனர்.

மஹிந்த அரசில் இருந்து விலக வேண்டும் என்று அன்று குரல் கொடுத்தவர் ஹசன் அலி.இன்று மஹிந்தவுடன் போய் நிற்கிறார் பதவிக்காக.அவருக்கு அரசியல் தெரியாது.இதுதான் பிரச்சினை.முஸ்லிம் காங்கிரஸில் இருந்து கிழக்கின் முதலமைச்சராகும் வாய்ப்பை இழந்துவிட்டார் ஹசன் அலி.-என்றார்.

[ஊடகப் பிரிவு ]